Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!…. யாரும் அதை நம்பாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

திருப்பதி தேவஸ்தான நிர்வாகமானது ஏழுமலையான் கோயில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதற்ககிடையில் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு திரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.

ஆன்லைன் வாயிலாக லட்டு பிரசாதத்திற்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்ற தகவல் முற்றிலும் தவறானது ஆகும். அத்தகவலை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம். திருப்பதி தேவஸ்தானம் இணையத்தில் தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யலாம். எனவே லட்டு பிரசாதத்துக்கு ஆன்லைன் பதிவு கிடையாது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |