விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் நடித்து வருபவர் அர்னவ். மனைவி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர். இருவரும் கேளடி கண்மணி சீரியல் சேர்ந்து நடித்தன் மூலம் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து 5 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்தனர். சமீபத்தில் திவ்யா தனது திருமண போட்டோக்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டார். மேலும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். அதனை தொடர்ந்து கற்பிணியான தன்னை அர்னவ் அடித்து துன்புறுத்துவதாகவும், செல்லம்மா சீரியல் ஹீரோயினியுடன் தொடர்பில் இருப்பதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார். அதன் பிறகு திவ்யா கமிஷனர் அலுவலகம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து அர்ணவை போலீசார் விசாரணைக்கு ஆஜராக அழைத்தனர். ஆனால் உடல்நிலை சரியில்லை என கூறிய ஆஜராகாமல் இருந்து வந்தார். தற்போது கடந்த வெள்ளிக்கிழமை சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த நடிகர் அர்னவை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அர்னவ் குறித்து நடிகை திவ்யா ஸ்ரீதர் பேட்டி அளித்துள்ளார். அதில், அர்னவ் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வேன். ஆனால் அதனை அவருடைய பெற்றோர்கள் சொல்ல வேண்டும். ஏனென்றால் அர்னவ் அவருடைய பெற்றோரை காரணம் காட்டிதான் என்னை விட்டு பிரிந்தார். என்னோடு வாழ்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது, அதனை போல நடந்து கொள்ள வேண்டும். அவர் சொல்வது போல் நடந்து கொள்ளவில்லை எல்லாவற்றிலும் பொய்தான் சொல்கிறார் என்று தெரிவித்துள்ளார்.