Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அவங்கதான் எடுத்துட்டு போயிட்டாங்க” திருநங்கை எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்துவதற்கு பதிலாக அங்குள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்குவதற்காக வந்துள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் வைத்து காவல் துறையினர் சோதனை செய்து உள்ளே அனுமதித்தனர். இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் திருநங்கையான கார்த்திக் என்ற சுவேதா என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்குவதற்காக வந்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் கார்த்திக் என்ற சுவேதாவை சோதனை செய்த போது அவர் விஷ பாட்டில் வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் கார்த்திக் என்ற சுவேதாவிடம் இருந்து விஷ பாட்டிலை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க செய்தனர். அந்த மனுவில் திருநங்கை சுவேதா கூறுவதாவது, நான் மேலப்பாளையம் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறேன். இந்நிலையில் காவல்துறையினர் தவறான தகவலின் பேரில் வீட்டிற்குள் வந்து சோதனை செய்து அங்கிருந்த தங்க நகைகளை எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தங்க நகைகளை மீட்டு தரக்கோரி மனு கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே காவல்துறையினர் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற நகைகளை திருப்பித் தரவேண்டும் என அந்த மனுவில் திருநங்கை கார்த்திக் என்ற சுவேதா தெரிவித்திருந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த திருநங்கை கார்த்திக் என்ற சுவேதா தனது மொபட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து திடீரென தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் திருநங்கை சுவேதாவிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். அதன்பின் திருநங்கை சுவேதா காவல் துறையினரிடம் தனது பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

Categories

Tech |