Categories
அரசியல்

இந்தியா 21 நாள் ஊரடங்கு – மோடி அறிவிப்புக்கு திருமாவளவன் ஆதரவு …!!

பிரதமர் மோடி அறிவித்த 21நாள் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தினார். மோடியின் இந்த அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்றுள்ளது.

இது குறித்து திருமவளாவான் வெளியிட்ட தகவலில், இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் கையெடுத்து கும்பிடுறேன் , ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலேயே இருங்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் கொரோனா உங்கள் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் என்று மிகுந்த உருக்கத்தோடு  வேண்டுகோள் விடுத்தார். இதனை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்கு, நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கும் இதை விட்டால் வேறு வழி இல்லை.

இதற்காகத்தான் இந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்கான அப்படி காரணம். இதனால் ஏராளமான பொருளாதார சிக்கல்கள் , வேறு பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம். ஆனால் வேறு வழியில்லை. மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வேண்டுகோளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இதனை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |