Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணமான 45 நாட்களில்…. பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணமான 45 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சேலத்தாம்பட்டி பகுதியில் வெங்கடேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பாலசுப்பிரமணியன் என்ற மகன் இருக்கின்றார். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சின்னபையன் என்பவரது மகள் சவுந்தர்யாவுக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் சவுந்தர்யா கர்ப்பம் ஆனதாக தெரிகிறது. இதன் காரணமாக சவுந்தர்யாவின் மீது கணவன்  பாலசுப்பிர மணியனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் மருத்துவமனைக்குச் சென்று நீ கர்ப்பமாகி எத்தனை நாட்கள் ஆகிறது என்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என பாலசுப்ரமணியன் தனது மனைவி சவுந்தர்யாவிடம் கூறியுள்ளார். இந்நிலையில் குளியலறைக்குச் சென்ற சவுந்தர்யா நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பாலசுப்பிரமணியன் குளியல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சவுந்தர்யா தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக சவுந்தர்யாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சவுந்தர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சவுந்தர்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சவுந்தர்யாவின் தந்தை சின்னபையன் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் “தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி பாலசுப்பிரமணியன், அவரது தந்தை வெங்கடேஸ்வரன் மற்றும் தாயார் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் சேலம் அரசு மருத்துவமனையில் சவுந்தர்யாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டனர். இதனால் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு சமாதானப்படுத்தினர். அதன்பின் உறவினர்கள் சவுந்தர்யாவின் உடலை வாங்கிச் சென்றனர். இவ்வாறு சவுந்தர்யாவுக்கு திருமணமாகி 45 நாட்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |