Categories
மாநில செய்திகள்

திருமண விழாவில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 50 பேர்… என்ன நடந்தது?… அதிர்ச்சி…!!!

 உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடந்த திருமண விழா ஒன்றில் அடுத்தடுத்து 50 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் சீதாப்பூர் அடுத்துள்ள மஹமதாபாத்தில் திருமண விழா ஒன்று நேற்றிரவு நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நேற்றிரவு விருந்தினர் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது. அப்போது திடீரென விருந்து சாப்பிட்ட ஒருவர் அங்கேயே மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மயக்கமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும்போதே மீண்டும் அடுத்தடுத்து 50 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களை பரிசோதித்து அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் இவர்கள் திருமண விழாவில் விருந்து சாப்பிட்ட உணவில் தான் விஷம் கலந்து உள்ளது என்று தெரிவித்தார். தற்போது அனைவரும சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிறிது நேரத்தில் அவர்களின் உடல்நிலை சீராகிவிடும் என்றும் கூறினார்.

இந்நிலையில் திருமண விழாவில் சமைக்கப்பட்ட உணவில் விஷம் கலந்தது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து வழக்கு பதிவு செய்து உணவு சமைத்தவர் திருமண ஏற்பாடுகள் செய்தவர் என அனைவரையும் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |