திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த திருநங்கை அமிலம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவலர் பயிற்சிப் பள்ளியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுடன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கையான சம்யுக்தா என்பவர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் திருநங்கை சம்யுக்தா பிறந்த நாளான நேற்று அமிலம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட தகவலில் காவலர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அதனை சம்யுக்தா மறுத்துள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருநங்கையான சம்யுக்தாவிடம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சென்று விசாரணை நடத்தி வருகிறார்.