Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு பொழப்பா… விசாரணையில் தெரியவந்த உண்மை… மாவட்ட கலெக்டரின் உத்தரவு…!!

தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து சூப்பிரண்டு அபிநவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அப்பகுதியில் சூப்பிரண்டின் உத்தரவுப்படி காவல் துறையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஆத்தூர் அம்மம்பாளையம் பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் வெங்கடேஷ் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் வெங்கடேஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்பின் வெங்கடேஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |