Categories
சினிமா தமிழ் சினிமா

த்ரிஷா நடிக்கும் “ராங்கி” படம்… 3 வருஷத்துக்கு பின் வெளியான ரிலீஸ் தேதி….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

அமீர் டைரக்டு செய்த மெளனம் பேசியதே (2002) படம்தான் த்ரிஷா, கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் திரைப்படம். இதையடுத்து அவர் கில்லி, திருப்பாச்சி, ஆறு என பல ஹிட் திரைப்படங்களில் நடித்தார். அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன்-2, சதுரங்க வேட்டை-2, ராம் (மலையாளம்) ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளது.

த்ரிஷா நடிக்கும் புது இணையத்தொடர்  படப்பிடிப்பு முடிந்ததாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் த்ரிஷா அறிமுக டைரக்டர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகும் தி ரோட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். லைகா தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் கதை எழுத “ராங்கி” எனும் படத்தை இயக்குனர் எம். சரவணன் இயக்கியுள்ளார்.

த்ரிஷா நடிக்கும் ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் அடுத்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். கடந்த 2019 ஆம் வருடம் இந்தப் படத்தின் டீசர் வெளியாகியது. தற்போது காலம் தாழ்ந்து டிச.30ல்  இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிட்டத்தக்கது.

 

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

Categories

Tech |