ஏற்றுமதி செயல்பாட்டில் தமிழகம் தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது ஏற்றுமதி என்பது முடக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுவாக ஏற்றுமதி செயல்பாட்டில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து, ட்விட்டரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அரசு கொள்கை, வர்த்தக நிலவரம், ஏற்றுமதி சூழல், ஏற்றுமதி செயல்பாடு ஆகிய 4 அம்சங்களை கருத்தில் கொண்டு 2020ம் ஆண்டு ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளதாகவும், அதில் குஜராத் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2ஆம் இடத்திலும், தமிழ்நாடு 3ஆம் இடத்திலும் இருப்பதாக கூறியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், தேசிய அளவில் ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் 46 சதவீதமும், எலெக்ட்ரானிக் மற்றும் ஆடை ஏற்றுமதியில் 19 சதவீத பங்கையும் தமிழகம் கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் வெளியிட்ட வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது தமிழகம், ஏற்றுமதிக்கு ஏற்ற அனைத்து அம்சங்களிலும் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தேசிய அளவில் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.