நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகள் திறக்கப்பட்ட போதிலும் பார்வையாளர்கள் அதிகம் வரவில்லை என்பதால் தொடர்ந்து பல படங்கள் ஓடிடியில் வெளியானது. இதையடுத்து கடந்த பொங்கல் தினத்தில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது . இதனால் பட தயாரிப்பாளர்களுக்கு திரையரங்குகள் மீது மீண்டும் நம்பிக்கை வந்தது .
அந்த வகையில் நடிகர் விஷாலின் ‘சக்ரா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது . இந்நிலையில் ‘சக்ரா’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.