Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தபால் நிலையங்களில் திரண்ட மாணவர்கள்…. இங்கேயும் அனுப்பலாம்…. அதிகாரிகளின் தகவல்….!!

ஆன்லைனில் தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை அனுப்ப தபால் நிலையங்களில் திரண்டனர். 

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக என்ஜினீயர்கள், கலைக்கல்லூரி மற்றும் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு விடைத்தாள்களை அதே நாட்களில் இணையதளத்தில் அனுப்புவதோடு, விரைவு தபால் மூலமும் கல்லூரிகளுக்கு அனுப்புவதற்கு அறிவிக்கப்பட்டது. எனவே தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு தபால் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை சென்னை போன்ற பல்வேறு வெளிமாவட்ட கல்லூரிகளுக்கும் அனுப்பி வைத்து வருகின்றனர்.

இவ்வாறு மாவட்டத்தின் பல்வேறு தபால் நிலையங்கள் மூலம் மாணவர்கள் அனுப்பி அனுப்பிவைத்தாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் மட்டும் பெரும்பாலோனோர் திரண்டு வருகின்றனர். இதற்காக 3 சிறப்பு கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டு விரைவு தபால்கள் பெறப்படுகின்றன. இதனையடுத்து மற்ற தபால் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே விரைவு தபால்கள் செயல்படும்.

ஆனால் தலைமை தபால் நிலையத்தில் மட்டும் 9:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படுகிறது. இங்கு மாணவர்கள் அதிகமாக வருவதனால் தபால் நிலையத்திற்கு வருவாயும் அதிகரித்துள்ளது. இதைப்போன்ற நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரயில் நிலையத்தில் இயங்கிவரும் ஆர்.எம்.எஸ். தபால் நிலையத்தில் தினசரி மாலை 6.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை விரைவு தபால் அனுப்பப்பட்டு வருகின்றது. எனவே அங்கு சென்றும் மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை அனுப்பலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |