வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டதுயடுத்து பக்தர்கள் சுசாமி தரிசனம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து இருக்கின்றது. அதன்படி வழிபாட்டு தலங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டது.
இவ்வாறு சுசீந்திரம், தாணுமாலய சாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், தோவாளை முருகன் கோவில் போன்ற அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.