திரைப்படம் பார்த்த பள்ளி மாணவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா நாடானது அமெரிக்கா, தென்கொரியா போன்ற எதிரி நாடுகளிலிருந்து வரும் அனைத்து கலாச்சார பொருள்களுக்கும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தென்கொரிய திரைப்படமான தி அங்கிள் படத்தை யாங்ஹாங் மாகாணத்தை சேர்ந்த 14 வயது பள்ளி மாணர் ஒருவர் ஐந்து நிமிடங்கள் பார்த்துள்ளார்.
இதற்காக அவருக்கு 14 வருடங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர் ஹைசன் சிட்டியில் உள்ள ஒரு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளியில் அந்த திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் “தென்கொரியாவின் திரைப்படங்கள், பதிவுகள், தொகுப்புகள், புத்தகங்கள், பாடல்கள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை நேரில் காணவோ கேட்கவோ அல்லது வைத்திருப்பவர்களுக்கோ 5 ஆண்டுகளுக்கு கூடுதலாக இல்லையெனில் பதினைந்து வருடங்களுக்கு உள்ளாகவோ தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாகவே புகழ்பெற்ற நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியான Squid Gameஐ வடகொரியாவில் மாணவர்கள் கண்டதற்கு கையும் களவுமாக பிடிபட்டனர். இதற்காக அவர்களுக்கு பயங்கர தண்டனைகள் வழங்கப்பட்டதாக பிரபல அமெரிக்கா ஊடகம் ஒன்று செய்தி வெளியட்டுயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.