வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை மக்களே நிராகரிப்பார்கள் என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுதபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அரசை தொடர்ந்து கூறிவரும் திமுக தலைவர் ஸ்டாலினை சட்டமன்ற தேர்தலின் போது மக்களே நிராகரிப்பார்கள் என்றார்.
தொடர்ந்து திரையரங்குகள் திறப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளதாலேயே திரையரங்கைை திறப்பது தாமதம் ஆவதாக தெரிவித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜு பூஜையில் கலந்துகொண்டு பிரசாதம் வழங்கினார். சட்டமன்ற தேர்தலின்போது ஸ்டாலினை மக்களே நிராகரிப்பார்கள் என்றும் திரை அரங்குகள் திறப்பின் போது யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.