Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சிறப்பு பேருந்து…. திருச்சியில் இருந்து என்னென்ன ஊருக்கு சிறப்பு பேருந்து தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 24 ஆம் தேதி தீவாளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் வெளியூர் பயணங்களும் திட்டமிட்டு கொண்டு இருக்கின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் ரயில்கள் தமிழக அரசு போக்குவரத்து கழக சார்பில் மாவட்ட வாரியாக சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியப் பிரதீப் குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அரியலூர், ஜெயங்கொண்டதிலிருந்து சென்னைக்கு 50 சிறப்பு பேருந்துகளும், துறையூர், பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு 20 பேருந்துகளை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு 50 சிறப்பு பேருந்துகளும், கோவைக்கு 20 சிறப்பு பேருந்துகளும், திருப்பூருக்கு 20 சிறப்புப் பேருந்துகளும், திண்டுக்கல், பழனிக்கு 25 சிறப்பு‌ பேருந்துகளும், தஞ்சாவூருக்கு 50 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. அதனை போல திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர், ஜெயங்கொண்டதிற்கு 50 சிறப்பு பேருந்துகளும், பெரம்பலூருக்கு 25 பேருந்துகளும், துறையூருக்கு 25 சிறப்பு பேருந்துகளும் மொத்தம் 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யும் ஆன்லைன் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் குழந்தைகளையும், உடைமைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |