Categories
பல்சுவை

தினமும் ரூ.34 சேமித்தால் போதும்…. நீங்களும் லட்சாதிபதியாகலாம் தெரியுமா?…. போஸ்ட் ஆபீஸ் சிறப்பு திட்டம்….!!!!

அஞ்சல் துறை பொது மக்களுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தநிலையில், பொது வருங்கால வைப்புநிதி என்பது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான மிகச்சிறந்த வழியாக இருக்கிறது. இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்லாமல் வரிவிலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் இருக்கிறது. மாதந்தோறும், நிலையான ஒரு தொகையை சேமித்து நீண்டகால அடிப்படையில் மிகப்பெரிய லாபத்தை ஈட்ட பிபிஎப் சேமிப்பு உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

அஞ்சல் துறை அலுவலகத்தில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய ஏராளமான மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம் இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி தொகை தான். 7.1% வட்டி வழங்கப்படுகிறது.
இதில் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு 500 ரூபாயும் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஒரே தவணையில் 1.50 லட்சம் செலுத்த முடியாவிட்டால் ஒவ்வொரு மாதமும் 12,500 ரூபாய் செலுத்தலாம். மாதம் 12,500 விடுங்கள்.

உங்களுடைய அன்றாட செலவில் தினந்தோறும் 34 ரூபாய் சேமித்தால் கூட போதும். இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய தகுதியானவர்கள் தான். இந்த திட்டம் நீண்டகாலம் பணத்தை சேமிக்க நினைப்பவருக்கு ஒரு சிறந்த திட்டமாகும். மேலும் டிபிஎஃப் திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள் ஆகும். தங்களுடைய தேவைக்கேற்ப ஒவ்வொரு 5 ஆண்டுகளாக நீட்டித்துக் கொள்ளலாம். அதாவது நீங்கள் தினந்தோறும் 34 ரூபாய் சேமித்து வைத்தாலே போதும். ஒரு மாதத்திற்கு 1054 ரூபாய். இந்த தொகையை, அப்படியே போஸ்ட் ஆபீஸில் இருக்கும் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

15 ஆண்டுகளுக்கு நீங்கள் சேமிக்கும் தொகை 1.80 லட்சம் ரூபாய் அதற்கு வட்டியாக 1.45 லட்சம் சேர்த்து உங்களுக்கு மொத்தம் 3.25 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்தத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நிதி தான் நீங்கள் ரூபாய் 5.32 லட்சம் ரூபாய் பெற முடியும். கம்மியான தொகையில் முதலீட்டை நீட்டித்து பெரிய தொகையை ஈட்ட முடியும். இவைதான் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும். இதேபோன்று இந்தத் திட்டத்தில் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்கினால் திட்டத்தின் முதிர்வு காலத்தில் பெரிய தொகையை ஈட்ட முடியும்.

Categories

Tech |