Categories
மாநில செய்திகள்

தினகரனுக்கு பச்சைக்கொடி காட்டிய எடப்பாடி பழனிச்சாமி…. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை தான் சொல்லி வருகிறார். அது என்னவென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்பதுதான்‌. நேற்று மீண்டும் இந்த கருத்தையே கூறியுள்ளார். இன்னும் ஐந்து ஆண்டுகள் அல்ல மூன்று ஆண்டுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் சோர்ந்து விடாதீர்கள் என்று தனது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அப்படி பேசினாரா அல்லது ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கத்தை இவ்வாறு புரிந்து கொண்டாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம். குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பிரச்சார சூடுப்படுத்துள்ளது. இந்நிலையில் 2024ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல் என்ற பேச்சு கதைக்கு ஆவாது என்று அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றனர்‌.

அதனை தொடர்ந்து மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி நேற்று நாமக்கல்லிலும், ஓசூரிலும் பேசியது கவனம் பெற்று வருகிறது. வழக்கமாக மெகா கூட்டணியை திமுக தான் அமைக்கும். இதற்கிடையில் கூட்டணியில் சில கட்சிகள் இடம் பெற்ற போது கூட அனைத்து தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிப்பது என்பது ஜெயலலிதாவின் பாணியாக இருந்து வருகிறது.ஆனால் ஓபிஎஸ், சசிகலா என ஆளுக்கு ஒரு பக்கம் சென்று நிலை அதிமுகவின் வாக்கு வங்கி அடிவாங்கிவிட்டதை எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்துகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். அந்த மெகா கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கும் என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது. சட்டமன்ற தேர்தலில் பார்த்தது பாமக,‌ பாஜக புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டது. தேமுதிக இறுதி நேரத்தில் கழட்டிவிடப்பட்டு அவங்க உடன் இணைந்தது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாமகவும் பாஜகவும் அடுத்தடுத்த விலகி உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்தது.

நாடாளுமன்ற தேர்தலில் இந்த கட்சிகள் மீண்டும் இணையும்‌ என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மெகா கூட்டணி என்று கூறியது, அமுமுகவை மனதில் வைத்து தான் என்றுஎடப்பாடி பழனிச்சாமி நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். சட்டமன்ற தேர்தல் முடிவுகளை எடுத்து பார்த்தால் அதிமுகவின் வெற்றி பல இடங்களில் தடுக்கப்பட்டது அமமுகவால் தான். திமுக விட வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகள் பலவற்றில் அமுமுக கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. அமமுகவை கூட்டணியில் இணைக்கலாம் என்று அமித் ஷா, ஓபிஎஸ் ஆகியோர்கள் கூறியதை எடப்பாடி பழனிச்சாமி எடுக்கவில்லை. தற்போது ஓபிஎஸ் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியில் என்ற அடிப்படையில் தினகரோடு கைகோர்க்க தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவுக்கு உரிமை கோரும் ஓவிய சசிகலா ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் வீழ்த்தி விடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கிறார்.

Categories

Tech |