திமுக அரசின் செயல்பாடுகளை கண்டு அதிமுகவினர் பயப்படுகின்றனர் என கனிமொழி எம்.பி விமர்ச்சனம் செய்துள்ளார்
ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிராமசபை கூட்டம் நடந்து வந்தது. அதில் தமிழக முதல்வர் உள்பட திமுக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டியில், நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பங்கேற்று குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி கனிமொழி கூறிதாவது, அதிமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போது எந்த திட்டங்களும் மக்களுக்கு செய்யாத நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று சில மாதங்களே ஆன நிலையில் அவர் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளார். எனவே திமுக ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து அதிமுகவினர் பயப்படுகின்றனர். மேலும் இதனை அடுத்து மாநில பாஜக தலைவர் திமுகவின் அடித்தளம் சரியாக அமையவில்லை என்று கூறுவது நகைச் சுவை மிக்கதாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.