கேப்டன் வரும் போது தமிழகத்தில் பூகம்பம் வருமென்று விஜயபிரபகரன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் பகுதியில் தேமுதிக சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் , விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய விஜய் பிரபாகரன் , தேமுதிக மக்களுக்காக உருவாக்கப்பட்டது.
இந்த கழகத்தில் நாட்டுக்கு என்னென்ன தேவையோ என்ற கொள்கையை தலைவர் வைத்துள்ளார். பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தை அப்பவே நம்ம கேப்டன் தான் கொண்டு வந்தார். நம்முடைய திட்டங்களை சொல்ல பயமா இருக்கு. பக்கத்து மாநிலம் அதனை காப்பியடித்து விடுகிறார்கள். 2005-ல் வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்கள் தலைவர் சொன்ன திட்டம். இந்த திட்டத்தை இப்போது பார்த்த இளைஞர்கள் சோசியல் மீடியாவில் இப்படி ஒரு தலைவர் வர மாட்டாரா ? என்று ஏங்குகிறார்கள்.
15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டத்தை கொண்டு வந்தது தலைவர் தான். அவரை தமிழகம் தான் இழந்து விட்டது. கேப்டன் மாதிரி ஒரு தலைவர் தமிழகத்திற்குத் தேவை. அதனால நீங்க அனைவரும் சிந்திச்சு வாக்களித்து வாய்ப்பு கொடுக்கணும். தேமுதிக மீண்டும் 10 சதவீத வாக்கு வாங்கி ஆட்சிக்கு வரும் என்ற ஒரு திமிரோடு சொல்கிறேன்.
கேப்டனை முதல்வராக உட்கார வையுங்க , அப்பறமா தமிழ்நாடு எப்படி மாறுது பாருங்க. 2020இல் இந்தியா வல்லரசாக மாறும் என்று அப்துல்கலாம் சொன்னது போல தமிழ் நாடு வல்லரசு நாடாக மாறும், இது கண்டிப்பாக நடக்கும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது.தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். பொறுமையா இருங்க. எப்போதும் , யாராலும் கணிக்க முடியாது.
எப்போ பூகம்பம் வரும் என்று தெரியாது. வரும்போது எல்லாரும் தெறித்து ஓடுவார்கள். கேப்டன் வருகையை பார்த்தால் தமிழகத்தில் பெரிய பூகம்பம் தான் வரும். கேப்டனின் உடல்நிலை சூப்பரா இருக்கு , சிங்கம் போல , ஸ்டைலா , கெத்தா சிரிச்சுகிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்காரு. மக்களை தங்கத்தட்டில் தாலாட்டி உங்கள் அனைவரையும் எப்படி பொருளாதாரத்தில் உச்சத்துக்கு கொண்டு போறாருனு பாருங்க. கேப்டன் கிட்ட அவ்வளவு திட்டம் இருக்கு என்று விஜய் பிரபாகரன் தெரிவித்தார்.