திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் இஸ்ரேல் படைக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே சண்டை நிகழ்ந்துள்ளது. இந்த மோதல் சுமார் 10 நாட்கள் நீடித்த நிலையில் பாலஸ்தீனர் தரப்பில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் தரப்பில் சிலர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இருதரப்புக்கிடையே சண்டை நிறுத்தப்பட்டாலும் சிறிய அளவிலான மோதல்கள் மேற்குக் கரை பகுதியில் அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இஸ்ரேல் நடத்திய சோதனையின் போது ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்ததாகவும் 2 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஹமாஸ் இயக்கத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் அதில் ஒருவன் 16 வயது சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த சிறுவன் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவரா என தகவல் சரியாக தெரியவில்லை என பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல் குறித்து பாலஸ்தீன அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஹமாஸ் இயக்கம் கூறியதாவது “பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இஸ்ரேல் அதிகாரிகளுடனான சந்திப்பானது அந்நாட்டு இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது” என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.