Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுனே தெரியல…. எல்லாம் எரிந்து நாசம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

கூரை வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூவனூர் பாலம் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான கூரைவீடு இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், தீயணைப்பு துறை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

ஆனாலும் தீ விபத்தினால் கூரை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் இந்த விபத்தினால் வீட்டில் இருந்த கட்டில் பீரோ, பாத்திரங்கள் என 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |