விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி, செல்லம்மா போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர் திவ்யா கணேஷ். இந்நிலையில் திடீரென்று இவர் செல்லம்மா சீரியலில் இருந்து விலகினார். இதனால் திவ்யா கணேஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் சீரியலை விட்டு விலகினார் எனவும் அந்த சீரியலின் நாயகன் அர்னவ் தான் காரணம் எனவும் சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
மேலும் சிலர் டிஆர்பி குறைந்ததால் தான் அவர் விலகிவிட்டார் என கருத்துகள் எழுந்தது. இந்த நிலையில் சீரியலை விட்டு விலகியதற்கான காரணத்தை திவ்யா கணேஷ் சோஷியல் மீடியா லைவ்வில் வந்தபோது ரசிகர்களிடம் தெரிவித்து உள்ளார். அதாவது “செல்லம்மா சீரியலில் என்னை தொந்தரவு செய்துகொண்டே இருந்தனர்.
வேலை பார்க்கக்கூடிய இடத்தில் நிம்மதியில்லை எனில் அந்த வேலையை விட்டுவிடுவோம் அல்லவா..? அதன் காரணமாக தான் நான் விலகிவிட்டேன். அதே நேரம் பாக்கியலெட்சுமி சீரியலில் தொடர்ந்து ஜெனியாக நடிப்பேன். அந்த சீரியலில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை” என கூறியுள்ளார். இருப்பினும் செல்லம்மா சீரியலில் தொந்தரவு செய்தது யார்..? என்பது பற்றி அவர் எதையும் வெளிப்படையாக கூறவில்லை.