Categories
உலக செய்திகள்

திடீரென்று ஏற்பட்ட விபத்து…. நிலத்தடியில் சிக்கிய 75 பேர்…. வெளியான தகவல்….!!

சைபீரியாவில் வெடிப்பு மற்றும் தீ விபத்துக்குப் பின் 75 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய நாட்டின் Kemerovo பிராந்தியத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 11 பேர் இறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டாலும் அதிகாரிகள் தரப்பில் அதை உறுதி செய்யவில்லை என்று தெரிகிறது. இதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையில் மீத்தேன் வாய் கசிவு ஏற்படலாம் என தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தாலும் நிர்வாகிகள் தரப்பில் வேலையை நிறுத்த கோரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காற்று வெளியேறும் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்துள்ளது. எனவே சுரங்கத்தில் பொருத்தப்பட்டிருந்த உபகரண செயலிழப்பு அல்லது இயற்கை காரணங்களால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் கடும் குளிர் என்பதால் மீட்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இதுவரை 236 நபர்கள் மீட்கப்பட்டதாக கூறப்பட்டாலும், 75 பேர் இன்னமும் அந்த சுரங்கத்தில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. ஆனால் ரஷ்ய அதிகாரிகள் தரப்பில் 45 பேர் என்றே தெரிவித்துள்ளது.

Categories

Tech |