Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி தயாரித்த வெடிகுண்டு…. திடலில் வெட்டப்பட்ட பள்ளம்…. போலீஸ் செய்த செயல்….!!

பறிமுதல் செய்யப்பட்ட சணல் வெடிகுண்டுகளை காவல்துறையினர் செயலிழக்க செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டையில் வியாபாரம் செய்வதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு அனுமதியின்றி ஒரு இடத்தில் சணல் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது. அப்போது அங்கு சென்ற காவல்துறையினர் சணல் வெடிகுண்டுகள், அதற்கு பயன்படுத்தப்படும் திரி, புஸ்வானம் தயாரிப்பதற்கான மண் குடுவை, ஒலக்கை வெடி போன்றவற்றை பறிமுதல் செய்ததோடு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை காவல்துறையினர் பாதுகாத்து வந்த நிலையில் அதனை செயலிழக்க செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் முத்துப்பேட்டைக்கு வந்தனர். அதன்பின் இன்ஸ்பெக்டர் அழகேசன் முன்னிலையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களை காவல்துறையினர் எடுத்துச் சென்று கோவிலூர் சாலையோரம் உள்ள திடலில் பள்ளம் வெட்டி சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கி அவற்றை வெடிக்க வைத்து செயலிழக்க செய்தனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் தீயணைப்பு மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Categories

Tech |