பேருந்து நிறுத்த கட்டிடத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள புத்தகரம் கிராமத்தில் விஜய்அரசன் என்பவர் வசித்து வந்தார். இவர் திருப்பூரில் உள்ள ஜவுளி ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக விஜய்அரசன் தன் கிராமத்திற்கு வந்தார். இதனையடுத்து விஜய்அரசன் பட்டுக்கோட்டையில் உள்ள தனது ஆலை உரிமையாளரின் வீட்டிற்கு கடந்த 3-ஆம் தேதி மோட்டார்சைக்கிளில் சென்றார்.
அப்போது கீழதிருபாலக்குடி என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள பேருந்து நிறுத்த கட்டிடத்தின் மீது விஜய்அரசன் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் படுகாயமடைந்த விஜய்அரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய்அரசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.