தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இவர் தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டு பேசினார். அப்போது தற்காக பட ப்ரமோஷன் விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்ற காரணத்தை நயன்தாரா மனம் திறந்து கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமான படங்கள் எதுவும் அவ்வளவாக வெளியானது இல்லை. பட விழாக்களில் கூட நாயகிகளை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்து விடுவார்கள். நாயகிகளுக்கு பெரிய அளவில் மதிப்பு இருக்காததோடு, அதிக அளவில் ஹீரோயின்களை பற்றி பேசவும் மாட்டார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. தயாரிப்பாளர்கள் ஹீரோயின்களை வைத்து படம் இயக்கவும் முன்வந்து விட்டார்கள் என்று கூறினார். மேலும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.