தமிழ் சினிமாவில் ஈஸ்வரன் மற்றும் பூமி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். இந்நிலையில் நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் கூறியதாவது, சினிமா துறையை பொறுத்த வரை யாருமே திறமையை பார்த்து வாய்ப்பு கொடுப்பதில்லை. கேவலம் அழகைத்தான் பார்க்கிறார்கள். திறமைக்கு மதிப்பு கிடையாது. திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று கூறினால் அதை நான் நம்ப மாட்டேன். உடம்பை காட்டினால் மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கும்.
20% பேர் மட்டும் தான் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்கிறார்கள். என்னை போன்ற நாயகிகளுக்கு பெரிய ஹீரோக்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் சம்பளம் மட்டும் தான். ஏனெனில் முன்னணி கதாநாயகிகள் சம்பள விஷயத்தில் கறார் காட்டுகின்றனர். ஆனால் நான் அப்படி கிடையாது கொடுப்பதை வாங்கிக் கொள்வேன். இதனால்தான் என்னை நிறைய படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்பது எனக்கு சமீபத்தில் தான் தெரியவந்தது என்று கூறியுள்ளார். மேலும் நடிகை நிதி அகர்வால் ஒரு படத்திற்கு 30 முதல் 50 லட்சம் வரை தான் சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது.