Categories
மாநில செய்திகள்

இவர்கள் வள்ளுவரை பயன்படுத்திக் கொண்டனர் – வானதி ஸ்ரீனிவாசன்

திராவிட இயக்கங்கள் திருவள்ளுவரை தங்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டது என தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘திருவள்ளுவர் இந்து மதத்தைச் சார்ந்தவர். திருக்குறளில் அதிகமான இடத்தில் இதனை திருவள்ளுவர் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இடையில் தன்னுடைய அரசியல் காரணத்திற்காக திருவள்ளுவர் மதச்சார்பற்றவர் என பலரும் கூறினார்கள்.

பகுத்தறிவு என கூறிக்கொண்டு திராவிட இயக்கங்கள் இந்துமத எதிர்ப்பைதான் செய்து கொண்டிருந்தன. அதற்காக திருவள்ளுவரை பயன்படுத்தி வந்தார்கள்.திருவள்ளுவரை உயர்ந்த நிலையில் பாஜக வைத்துள்ளது. சிலைகளை அசிங்கப்படுத்துபவர்களை விட்டுவிட்டு, மரியாதை செய்பவர்களை காவல் துறையினர் கைது செய்வது தவறானது’ என்று கூறினார்.

Categories

Tech |