டிக்டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி முத்து தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சிக்கு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜிபி முத்து வுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து மன வருத்தத்துடன் பாதியிலேயே திரும்பிவிட்டார். இது குறித்து தற்போது ஜி.பி முத்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் நயன்தாரா என்னுடன் சேர்ந்து படம் பார்க்க விரும்புவதாக கூறினார். ஆனால் நான் அங்கு சென்றபோது என்னை ஒரு ஓரமாக உட்கார வைத்து விட்டார்கள்.
அங்கே இருந்த பவுன்சர்கள் என்னை மிகவும் சீப்பான முறையில் நடத்தினார்கள். அதோடு தூரப்போன்னு சொல்லி துரத்தினார்கள். இது எனக்கு மிகவும் சங்கடமாக அமைந்ததால் நான் நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறி விட்டேன். அதன் பிறகு நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் எனக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் நான் பாதி தூரம் வந்து விட்டதால் இன்னொரு நாள் சந்திக்கலாம் என்று வீட்டிற்கு திரும்பி விட்டேன் என்று வேதனையோடு கூறியுள்ளார். ஜி பி முத்துவின் பேட்டி தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.