தமிழ் சினிமாவில்பிரபலமான வில்லன் நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரியில் மைனா நந்தினி உள்ளே வந்தார்.
கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பதிலாக நடிகர் மன்சூர் அலிகான் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் தீயாகப் பரவியது. இந்நிலையில் இந்த தகவல்களுக்கு தற்போது நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தால் நான் தான் பிக் பாஸ் ஆக இருந்திருப்பேன். எனக்கு அந்த நிகழ்ச்சியில் கூத்தடிப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. நான் மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தால் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சியாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி இருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் நடிகர் மன்சூர் அலிகான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான தகவல்கள் வதந்தி என்பது தெரியவந்துள்ளது