செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்களான கோவை செல்வராஜ், சசிகலா அம்மா கட்சி ஆபீசுக்கு வருகிறேன் என்று சொன்னார்கள், வந்துருவார்களோ என்று பயந்துட்டு என்ன செய்தார்கள், இரவும் பகலமாக குடித்துவிட்டு கட்சி ஆபீசில் புனிதமான இடத்தில் கும்மாளம் போட்டு கிடந்தார்கள், பெரிய ஸ்கினை போட்டு ஆடிட்டு இருந்தார்கள்.
வெள்ளி வேல் அம்மா கொடுத்தது எடுத்துட்டு போயிட்டார்கள் என்கிறார்கள், அதே சிபிசிஐடி காவல் துறையினர் என்ன சொன்னார்கள் அந்த வெள்ளி வேல் உள்ளே தான் இருக்கிறது என்று சொன்னார்கள், அதற்காக சி.வி.சண்முகமும் எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணன் கிட்ட மன்னிப்பு கேட்கணும். பித்தலாட்டம், பொய், கேப்மாரி தனம் இவர்கள் எல்லாருமே எல்லா திருட்டுத்தனமும் செய்கிறார்கள்.
ஓபிஎஸ் தவிர வேற யாராலையும் இந்த கட்சியை நடத்த முடியாது, அந்த யோகிதை யாருக்கும் இல்லை. இந்த கட்சிக்கு துரோகம் செய்யாதீர்கள், நீங்கள் ஒன்றும் இன்னும் ஆயிரம் வருடம் வாழப் போவதில்லை, உங்கள் காலத்தில் இந்த கட்சி அழிந்தது என்ற கெட்ட பெயருக்கு ஆளாக வேண்டாம், தயவு செய்து அண்ணா திமுக வளரட்டும், அண்ணா திமுக தொண்டர்கள் எல்லாம் பாவம். அவர்களெல்லாம் என்ன பாவம் செய்தவர்கள் ஏன் இப்படி அழிக்கிறீர்கள் என தெரிவித்தார்.