முத்துராமலிங்க தேவரின் 112ஆவது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வரும் 30ஆம் தேதி காலை 9 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்ஜிஆர் மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்டவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்று மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.