Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தேதியை தவறாக கூறிய மனைவி…. ஆசிரியரின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

மனைவியை கத்தியால் குத்திய ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள இலக்கியம்பட்டி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசு பள்ளி ஆசிரியராக இருக்கின்றார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். இவர்களில் செந்தில்குமார் தன் மனைவியிடம் தேதி என்ன என்று கேட்டுள்ளார். அப்போது மகாலட்சுமி தேதியை தவறாக கூறியதாக தெரிகிறது.

இதனால் கணவன்-மனைவி இவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் கோபமடைந்த செந்தில்குமார் தன் மனைவியை கத்தியால் குத்தினார். அப்போது மகாலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனையடுத்து காயமடைந்த மகாலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின்படி டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

Categories

Tech |