ஆஸ்திரேலியா தேசிய பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் சீனாவுடனான 2 ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியல் நடக்கும்பொழுது ரகசிய வெளிநாடு தலையீட்டை தடை செய்வதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் சீனாவுக்கு எதிராக பாரபட்சம் காட்டும் வகையில் இருப்பதாக சீனா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
ஆகவே இந்த சட்டத்தின் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.மேலும் ஆஸ்திரேலியா தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி சீனாவிடமிருந்து 2 ஒப்பந்தங்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் ரத்து செய்திருப்பது சீனாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் அரசிடம் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு சீனாவின் லட்சிய திட்டமான ‘பெல்ட்’ மற்றும் ‘சாலை ‘போன்ற திட்டங்களுக்கு கீழ் சீனா அரசு ஏற்படுத்திக் கொண்ட 2 ஒப்பந்தங்களையும் தான் தற்போது ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளதாக கூறியிருக்கிறது.
மேலும் சீனாவுடன் மட்டுமல்லாமல் விக்டோரிய மாகாண கல்வித்துறையுடன் சீரியா கடந்த 1999 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தம் மற்றும் 2004 ஆம் ஆண்டு ஈரான் நாட்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் இரண்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
.