Categories
உலக செய்திகள்

உலகையே வியப்பில் ஆழ்த்திய ரோபோ கண்காட்சி … அசத்திய சீன மாணவர்கள் ..!!

சீனாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ரோபோ ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு வடிவிலான ரோபோக்களை போட்டியாளர்கள் காட்சிப்படுத்தினர்.

மனித சக்தியை மிஞ்சும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் உலகில் வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக சில வெளிநாடுகளில் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பங்கள் சாதாரணமாக மனிதர்களோடு மனிதர்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகளில் வீட்டிற்கு வீடு கார்கள் இருப்பது போல் இனி வரக்கூடிய காலங்களில் வீட்டிற்கு வீடு ரோபோ இருக்கும் கலாச்சாரம் வந்து விடும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்து இருக்கிறது.

Image result for china robot exhibition images

சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஹுமானாய்ட் ரோபோக்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு விதமான ரோபோக்களை போட்டியாளர்களை காட்சிப்படுத்தினர். ஹுவாங்கிடாங் மாகாணத்தில் உள்ள நகரில் பத்தாவது ஆண்டாக இந்த போட்டியை  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Image result for china robot exhibition images

 சுமார் 20 பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது புதுமை படைப்புகளை காட்சிப்படுத்தினர் .  குறிப்பாக  மாணவர்கள் உருவாக்கி இருந்த சிறிய அளவிலான ரோபோக்கள் வரிசையில் நின்று நடனமாடும் காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.  மேலும் குத்துச் சண்டை இடுவது போல் அமைக்கப்பட்டிருந்த ரோபோக்கள், கத்தியைச் சுழற்றுவது போன்ற ரோபோக்கள் அங்கிருந்த நடுவர்களை வியப்பில் ஆழ்த்தியது .

Categories

Tech |