தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் வலம் வருபவர் தெருக்குரல் அறிவு. இவர் காலா படத்தில் இடம்பெற்ற உரிமையை மீட்போம் என்ற பாடலை எழுதி பாடினார். அதன் பிறகு பல படங்களில் பாடல்கள் பாடியிருந்தாலும் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான என்ஜாய் எஞ்சாமி ஆல்பம் பாடல் தான் தெருக்குரல் அறிவுக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது.
இவர் தற்போது வெளிநாடுகளிலும் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில் தெருக்குரல் அறிவு தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் என் திமிரான தமிழச்சி என்று பதிவிட்டு கல்பனா அம்பேத்கர் என்பவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இவருக்கு தற்போது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.