Categories
உலக செய்திகள்

தேர்தலில் இவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு… புதிய சட்ட திருத்தம்… பரபரப்பு செய்தி…!!!

ஹாங்காங் தேர்தலில் சீன ஆதரவாளர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற சட்ட சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பெய்ஜிங் தலைநகரில் சீனாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய நாடாளுமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. ஹாங்காங் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக தேர்தல் விவகாரங்களுக்காக  நாடாளுமன்ற நிலைக்குழு வரைவு திட்டத்தை தாக்கல
செய்துள்ளது. ஹாங்காங் ” தேசபக்தர்கள்” மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

அதன்பிறகு சீன ஆதரவு தேர்தல் குழு ஹாங்காங் தலைமை நிர்வாகியை தேர்ந்தெடுக்கும் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மேலும் அந்தக் குழுவில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் பேரவை உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது என பல அம்சங்கள் நிறைந்த வரைவு திட்டத்தை செய்தி நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசின் ஆளுமையிலிருந்து ஹாங்காங் 1898 ஆம் ஆண்டு சீனாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் 1997 ஆம் ஆண்டு திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

மேலும் ஹாங்காங்கில் தற்போது மேற்கொண்டு வருகின்ற சட்டங்களே பின்பற்றப்படும் எனவும் ஹாங்காங் மக்களின் பேச்சுரிமை எழுத்துரிமை போன்றவைகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனிடம் சீன அரசு தெரிவித்தது. இதனிடையில் ஜனநாயக சீர்திருத்தங்கள் பற்றிய ஹாங்காங் போராட்டம் குறித்து பிராந்திய நாட்டில் சீனா அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்றியுள்ளதாக  அறிவித்தனர். தற்போது பிரிட்டன் சீனா மீது குற்றம்சாட்டி 1997 ஆம் ஆண்டு ஹாங்காங்  ஒப்படைத்த போது உங்களுக்கு அளித்த உறுதிமொழிக்கு எதிராக நடந்து கொள்வதாக கூறியுள்ளனர்.

எனது வாக்குறுதியை மீறும் வகையில் ஹாங்காங்  தேர்தல் நடைமுறைகள்  சீனா தேசிய நாடாளுமன்ற கூட்டத்தில் வரைவு திட்டத்தை தாக்கல் செய்யள்ளது. இத்திட்டத்தின் மூலம் சீனா அதிகாரத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. சீன பாதுகாப்பு துறைக்கு 20900 கோடி டாலர்  ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மேலும் முதல் முறையாக கடந்த ஆண்டை விட பாதுகாப்பு செலவுக்காக 6. 8 சதவீதம் அதிகமாகும் 20000 கோடி டாலருக்கும் அதிகமாக ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு இந்தியாவின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை விட மூன்று மடங்குஅதிகம் உள்ளது என தெரிவித்துள்ளது

Categories

Tech |