அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொதுச் செயலாளராகவும் தருணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. நீதிமன்ற இடைக்கால தடை விதித்தாலும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு இருப்பதால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார். இந்நிலையில் தான் தென் மாவட்டங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. அதாவது தென் மாவட்டங்கள் என்றால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வட்டத்தை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது. இந்த சூழலில் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் பன்னீர்செல்வம் மீது விமர்சன கருத்துக்களை முன் வைப்பது இல்லையாம். ஏன் அப்படி பேச வேண்டும் என நீங்கள் கேட்கலாம் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அலுவலகம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது.
அப்படி சொல்லியும் பெரும்பாலான தென் மாவட்ட அதிமுக செயலாளர் பின்பற்றவில்லையாம். இந்த விஷயம் தான் தற்போது சேலத்தில் முகாமில் எடப்பாடியின் காதுகளுக்கு வந்து சேர்ந்து உள்ளது. இப்படியே போனால் தென் மாவட்ட செல்வாக்கு சரிய ஆபத்து கூட நேரலாம். எனவே அனைவரையும் சரியாக கண்காணித்து கிடுக்குபிடிபோட வேண்டியது அவசியம் என்ற எண்ணத்திற்கு எடப்பாடி வந்திருப்பதாக தெரிகிறது. இதனை ஒட்டி ஐடி விங் மூலம் ரகசிய டீம் ஒன்றே நியமித்து தென் மாவட்டங்களை உன்னிப்பாக கவனிக்க உத்தரவு பிறப்பித்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் அய்யாதுறை பாண்டியன் மூலம் முக்கிய அசைமெண்ட் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் தெற்கில் பிரபலமான தொழிலதிபராக இருந்து வருகிறார். சமீபத்தில் அதிமுகவில் இருந்த நிலையில் கட்சியை பலப்படுத்த புதிய ஆதரவாளர்களை கொண்டு வர அறிவித்தப்பட்டுள்ளது. இதையொட்டி தென் மாவட்டம் ஒன்றில் பிரம்மாண்டமான விழாவில் நடத்தவும் திட்டமிட்டு ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு ஷாக் கொடுத்து செல்வாக்கை மீண்டும் ஒருமுறை கட்சியினருக்கு எதிர் தரப்பினருக்கும் உணர்த்த எடப்பாடி வியூகம் வகுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. இது குறித்து ஆலோசனைகள் உத்தரவுகள் அனைத்தையும் சேலத்தில் இருந்தபடியே கச்சிதமாக முடித்துள்ளார்.