Categories
மாநில செய்திகள்

விவசாய பணிகளை தொடர எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது: ஆலோசனையில் முதல்வர் கூறியது என்ன?

மே 3க்கு பிறகு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அறிவுரை வழங்கவுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. நேற்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுக்களுடன் ஆலோசனை நடத்திய குறிப்பிடத்தக்கது. இந்த நடந்து வரும் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியவை பின்வருமாறு:

* சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
* மேலும், சென்னை பெரிய நகரம், மக்கள் அதிகம் உள்ளதால் பாதிப்பு அதிகம் இருப்பதாக கூறியுள்ளார்.
* மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
* சந்தைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய தன்னார்வலர்களை பயன்படுத்தலாம்.

* விவசாயிகள் தங்கள் பணிகளை தொடர எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது என்றும் விவசாய பொருட்கள் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் மரிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
* மாநிலம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
*பொதுக் கழிவறைகளை நாள் ஒன்றுக்கு 3 முறை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* நியாயவிலை கடைகளில் டோக்கன் முறையில் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும்.

* விவசாயிகள் நேரடியாக தங்கள் பொருட்களை விற்பனை செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
* அரிசி ஆலை, எண்ணெய் ஆலை உள்ளிட்ட உணவு பதப்படுத்தும் ஆலைகள் இயங்குவதை உறுதி உறுதி செய்யவேண்டும்.
* 100 நாள் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
* 100 நாள் வேலைத்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்த்து அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு பணி தரலாம்.

* கொரோனா பாதிப்புள்ள சிவப்பு பகுதியை ஆரஞ்சு பகுதியாகவும், ஆரஞ்சு பகுதிகளை பச்சை பகுதிகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மே மாதத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
* கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் சில தொழில்களுக்கு தளர்வு வழங்குவது பற்றி அரசு முடிவெடுக்கும்.
* கொரோனா குறைந்த பச்சைப்பகுதிகளில் தொழில் துவங்க அரசு தரும் அறிவுரைகளை ஏற்று ஆட்சியர் செயல்படலாம். * எண்ணெய், ஜவ்வரிசி, முந்திரி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற ஆட்சியர்கள் உதவ வேண்டும்.

Categories

Tech |