அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றார். இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், பழைய வழக்குகளில் சவுக்கு சங்கரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு சவுக்கு சங்கர் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இவருக்கு ஜாமீன் வழங்கிய போது நீதிமன்றம் முக்கியமான 5 நிபந்தனைகளை விதித்தது. அதாவது தினமும் காலை 10.30 மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
சமூக வலைதளங்களில் எந்த கருத்தையும் பதிவிடக் கூடாது. கோர்ட் உத்தரவிட்டால் உடனடியாக மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வேண்டும். நீதித்துறை தொடர்பான எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது. 20,000 ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தில் 2 நபர்கள் பினைய கையெழுத்து போட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் சவுக்கு சந்தர் சிறையில் இருந்து வந்தவுடன் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது முதல்வர் ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டபோது அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கழகத் தலைவன் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சவுக்கு சங்கர் அதை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில் ப்ளூ சட்டை மாறனுக்கு போட்டியாக விரைவில் திரைப்பட ரிவ்யூவர் அவதாரம் எடுக்கப் போகிறாரா முதல்வர் என்று பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக கூடிய விரைவில் விவாதிப்போம் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.