மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதில் எந்த தவறுமில்லை என்று பிரேமலதா கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்ற பிறகு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புதிய கல்வி வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இந்தி கட்டாயமில்லை என மத்திய அரசு பின் வாங்கியது.
இந்நிலையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரமேலதா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க மத்திய, மாநில அரசுகளிடம் தேமுதிக கோரிக்கை வைக்கும். மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில்எந்த தவறுமில்லை என்று தெரிவித்துள்ளார்.