தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், அதிமுக கட்சியில் இபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறினர். இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அந்தஸ்தை ஆர்பி உதயகுமாருக்கு கொடுக்க வேண்டும் என அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் கடந்த 1988-89-ம் ஆண்டில் ஜானகி பதவி ஏற்றபோதும் இப்படித்தான் நீங்கள் பிரச்சனை செய்தீர்கள்.
நீங்கள் அனைவரும் கலகம் செய்வதற்காக மட்டுமே வந்திருப்பது போன்று தோன்றுகிறது. இந்தி திணிப்பை எதிர்க்கக் கூடாது என்பதை முடிவு செய்து தான் தாங்கள் வந்திருக்கிறீர்கள் என்று கூறி எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக கட்சியின் எம்எல்ஏக்களை கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கோஷமிட்டபடியே அங்கிருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி குறித்து விவரித்தார்.
அதாவது சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி என்றும், மற்ற பதவிகள் அனைத்தும் அவரவர் கட்சியில் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுகிறது என்றும் கூறினர். எனவே அவர்கள் யாரை விருப்பப்படுகிறார்களோ அவர்களை சபை மரபு படி முன் இருக்கையில் உட்கார வைக்கப்படுகிறார்கள். மேலும் யாரெல்லாம் சட்டப்பேரவையில் இருக்க வேண்டும் என்பது சபாநாயகரின் முடிவு. அதில் அவரை சேருங்கள். இவரை நீக்குங்கள் என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது என்றார்.