தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் திவ்யா கணேஷ். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி மற்றும் செல்லம்மா போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது செல்லம்மா தொடரில் இருந்து நடிகை திவ்யா கணேஷ் திடீரென விலகியுள்ளார். நடிகை திவ்யா சீரியலில் இருந்து தன்னுடைய சொந்த காரணத்திற்காக விலகினார் என்று கூறப்பட்டது.
ஆனால் நடிகை திவ்யா கணேஷ் அது உண்மையில்லை என்றும் மறுப்பு தெரிவித்ததோடு தான் எதற்காக சீரியலில் இருந்து விலகினேன் என்ற உண்மை காரணத்தையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பொதுவாக ஒரு இடத்தில் நிம்மதி இல்லை என்றால் அந்த இடத்தில் இருந்து நாம் விலகி விடுவோம்.
என்னை தொல்லை செய்து கொண்டே இருந்தனர். அதனால் தான் நான் சீரியல் இருந்து விலகி விட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை திவ்யா கணேஷ் தனக்கு தொல்லை கொடுத்த நபர் யார் என்பதை தெரிவிக்கவில்லை. இதனால் நெட்டிசன்கள் பலரும் உங்களுக்கு தொல்லை கொடுத்தது யார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.