Categories
சினிமா தமிழ் சினிமா

சாப்பிடுவதற்கே பணம் இல்லை… பிரபல வில்லன் நடிகரின் பரிதாப நிலை…!!

பிரபல வில்லன் நடிகரான சூரியகாந்தி சாப்பிடுவதற்கு பணம் இல்லை என உதவி கேட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதன்காரணமாக திரைப்படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் போன்ற அமைப்புகள் துணை நடிகர்கள், சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்தனர். அரசு இன்னும் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்காததால் துணை நடிகர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இதனால் ‘தூறல் நின்னு போச்சு’ என்ற பாக்கியராஜின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சூர்யகாந்த் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்து வருவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “தூறல் நின்னு போச்சு படத்தில் பாக்யராஜ் தான் என்னை அறிமுகம் செய்தார். மண்வாசனை, சீமையிலே போன்ற பாரதிராஜாவின் படங்களில் நடித்திருக்கிறேன். இறுதியாக கார்த்திக்கின் கைதி மற்றும் விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தேன். தற்சமயம் திரைப்பட படப்பிடிப்புகள் இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளும் சரியாக நடக்கவில்லை.

 

எனவே பொருளாதார ரீதியாகவும், சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற உடல்ரீதியாகவும் பாதிக்கப் பட்டிருக்கிறேன். ஒரு மாதத்திற்கான மருந்து மாத்திரைகள் வாங்கவே ரூ 1,500 செலவாகிறது. அதை வாங்குவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை. சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் இருக்கிறேன். தயவு செய்து எனக்காக உதவுங்கள்” என சூரியகாந்த்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |