Categories
மாநில செய்திகள்

என்னது….!! தடுப்பூசி முகாம் இனி கிடையாதா….? வெளியான தகவல்…..!!!!

இனி தடுப்பூசி முகாம் கிடையாது என்று சுகாதாரத்துரை தெரிவித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் தடுப்பூசி முகாம் அமைத்து மக்களை பயனடையச் செய்கிறது தமிழ்நாடு அரசு. தமிழகத்தில் மேகா தடுப்பூசி முகாம்களுடன் இணைந்து வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த தொடங்கிய நிலையில் 12 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பினால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம் மூலம் தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் பயன் அடைந்த நிலையில் இனி வாரம் தோறும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என்றும் தேவைக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் நடத்திக் கொள்ளலாம் என்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்தது. அதுமட்டுமின்றி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பு ஊசி கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து வருகிற 10ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸை தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம். மேலும் 60 வயசு மேற்பட்டவர்களுக்கு சுகாதாரம் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் தற்போது அரசு மருத்துவ மையங்களில் போடப்பட்டு வரும் பூஸ்டர் டோஸ் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் மத்திய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |