Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை கிடையாது… பொதுமக்கள் செல்லத் தடை: சிஎம்டிஏ அறிவிப்பு..!

மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை கோயம்பேடு சந்தைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், அதிகாலை முதல் 7.30 மணி வரை மொத்த கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். இயல்புநிலை திரும்பும் வரை கோயம்பேடு சந்தையில் கட்டுப்பாடுகள் தொடரும் என கார்த்திகேயன் கூறியுள்ளார். கோயம்பேடு சந்தையில் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சில முக்கிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

மேலும், கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பாக நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், சந்தையில் மொத்தம் இருக்கக்கூடிய 1,900 மொத்த விற்பனை கடைகளில் 600 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு உரிமையாளர் தரப்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஆனால், சில்லறை வியாபாரம் நடத்தும் 450 கடைகளை அமைந்தகரையில் இடத்தில் வைத்து இயக்கப்படலாம் என ஆலோசனை வழங்கியது. இதற்கு சிறு வையாபாரிகள் ஒப்புக்கொள்ள மறுத்துள்ளனர். அடுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வரை சுமார் 1,500 கடைகளுக்கும் மே 3ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கூறியிருந்தனர். இந்த நிலையில், கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக்கு தடை விதிப்பதாகவும், மக்கள் செல்ல தடை விதிப்பதாகவும் சிஎம்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |