ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற வில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் TNPSC தேர்வு முறைகேடு குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக 2015-2016 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்விலும் முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , இதனை முற்றிலும் மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில் , புகாரின் அடிப்படையில் மேற்கண்ட ஆய்வு வில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012 லிருந்து 2017 வரை ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பதை நீதிமன்றத்தில் கூறுவோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.