மத்திய அரசின் 2020-21 பட்ஜெட் அறிவிப்புகளில் விவாசயத் துறையை முன்னேற்ற தேவையான பல அறிவிப்புகள் உள்ளதாக பொருளாதார நிபுணபர் எம் எஸ் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார். இதில் விவசாயம் தொடர்பான ஏராளமான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்ஜெட் குறித்து பொருளாதார நிருணர் எம்எஸ் சுவாமிநாதன் கூறுகையில், “விவசாயத்தை முன்னேற்ற நிறைய புதிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் அனைவரும் விவசாய துறையில் ஈடுபட வேண்டும் என்பதற்குத் தேவையான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் உள்ளன.
அதற்காக மத்திய அரசின் இந்தப் பட்ஜெட்டை நான் பாராட்டுகிறேன். நாட்டின் பொருளாதரத்தில் மிக முக்கிய பங்கை வகிக்கும் விவசாயம் தொடர்பான விஷயங்களுக்கு இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசோடு இணைந்து விவசாயிகளும், விஞ்ஞானிகளும் நமது நாட்டை உணவு, தானியம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் ஆகியவற்றை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுகள்.
விவாசியகளின் கஷ்டத்தை போக்கத் தேவையான பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. விவசாயம் என்பது நம் நாட்டில் மாநில பட்டியலில் உள்ளது. எனவே, மாநில அரசும் விவசாயத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.