Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

இந்தியாவில் கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது என ராகுல் காந்தி ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இன்றுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருந்த நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். யாரும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம். வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க இந்தியா தாமதித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா தாமதித்ததால் இன்று பரிசோதனை கருவிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் பேருக்கு 149 என்ற வீதத்திலேயே இந்தியாவில் பரிசோதனை கருவிகள் உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், அதிவேக பரிசோதனை செய்தால் மட்டுமே கொரோனாவை எதிர்த்து போரிட முடியும் என வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |